/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கருத்தாடு கிராம சாலை சேதம்; நாள்தோறும் சென்று வருவதில் சிரமம்
/
கருத்தாடு கிராம சாலை சேதம்; நாள்தோறும் சென்று வருவதில் சிரமம்
கருத்தாடு கிராம சாலை சேதம்; நாள்தோறும் சென்று வருவதில் சிரமம்
கருத்தாடு கிராம சாலை சேதம்; நாள்தோறும் சென்று வருவதில் சிரமம்
ADDED : ஆக 10, 2025 09:22 PM

பந்தலுார்; 'தங்கள் கிராமத்திற்கு தேர்தல் முடிந்த பின்பு வராத அரசியல்வாதிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள், அடுத்த தேர்தல் நேரத்திலும் கருத்தாடு கிராமத்திற்கு ஓட்டுகேட்டு வரகூடாது,' என, அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
பந்தலுார் அருகே, சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கருத்தாடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், வனத்திற்கு மத்தியில் செல்லும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
சாலை மோசமான நிலையில் சேதமடைந்து காணப்படுவதால், வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத நிலை உள்ளது. இரவில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் இந்த சாலையை ஒட்டிய புதர் பகுதியில் யானைகள் முகாமிட்டு உள்ள நிலையில், இரவில் மக்களின் யானை தாக்கும் சம்பவங்கள் தொடர்கிறது.
சாலையை சீரமைக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தியும், கண்டுகொள்ளாத நிலையில், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால், நொந்துபோன மக்கள் கூறுகையில், 'தங்கள் கிராமத்திற்கு தேர்தல் முடிந்த பின்பு வராத அரசியல்வாதிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள், அடுத்த தேர்தல் நேரத்திலும் தங்கள் கிராமத்திற்கு ஓட்டுகேட்டு வரகூடாது,' என, அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.