/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நெடுஞ்சாலையில் உலா வந்த 'கட்டை கொம்பன்' வாகன ஓட்டிகள் அச்சம்
/
நெடுஞ்சாலையில் உலா வந்த 'கட்டை கொம்பன்' வாகன ஓட்டிகள் அச்சம்
நெடுஞ்சாலையில் உலா வந்த 'கட்டை கொம்பன்' வாகன ஓட்டிகள் அச்சம்
நெடுஞ்சாலையில் உலா வந்த 'கட்டை கொம்பன்' வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஜன 28, 2024 11:45 PM

பந்தலூர்:பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டை கொம்பன் என்று அழைக்கப்படும் யானை தனியாக சுற்றி வருகிறது. பகல் நேரங்களில் வனப்பகுதி, புதர்களின் ஓய்வெடுக்கும் இந்த யானை, இரவில் குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டு, வீடு, ரேஷன் கடைகளை உடைத்து, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளது.
இந்த யானை மனிதர்களை தாக்கும் முன்பாக, முதுமலை புலிகள் காப்பகத்திற்கு பிடித்து செல்ல வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், வனத்துறை உயரதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வரும் நிலையில், இந்த யானையால் உயிரிழப்புகள் ஏற்பட்டால் வனத்துறையினரே பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு தேவகிரி பகுதியில் இருந்து, பந்தலூர் - ஊட்டி நெடுஞ்சாலையில் ஹாயாக உலா வந்தது. வாகன ஓட்டுனர்கள் அப்பகுதி குடியிருப்புவாசிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானையை சாலையிலிருந்து தேயிலை தோட்டத்திற்குள் துரத்தினார்கள். தற்போது இந்த யானை கூவமூலா பழங்குடியின கிராமத்தை ஒட்டிய புதர் பகுதியில் முகாமிட்டிருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வனக்குழுவினர் இப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு யானையை விரட்ட வேண்டும். என, வலியுறுத்தப்பட்டுள்ளது.