/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாரியம்மன் கோவில் திருவிழாவில் கேரள ரத ஊர்வலம் அமர்க்களம்
/
மாரியம்மன் கோவில் திருவிழாவில் கேரள ரத ஊர்வலம் அமர்க்களம்
மாரியம்மன் கோவில் திருவிழாவில் கேரள ரத ஊர்வலம் அமர்க்களம்
மாரியம்மன் கோவில் திருவிழாவில் கேரள ரத ஊர்வலம் அமர்க்களம்
ADDED : ஏப் 28, 2025 11:17 PM

கோத்தகிரி, ;கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவில், கேரள ரத ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
காலை, 11:00 மணிக்கு டானிங்டன் பகுதியில் இருந்து, பஞ்ச வாத்தியம், தாலப்பொலி, சிங்காரி மேளம், செண்டை மேளம், திருக்காவடி ஊர்வலம் நடந்தது.
அதில், சிவன், பார்வதி, விநாயகர், ராமபிரான், ஆஞ்சநேயர் மற்றும் அம்மன் உள்ளிட்ட சுவாமிகளின் வேடமிட்டு கலைஞர்கள் பங்கேற்றனர். பகல், 1:00 மணிக்கு, கேரளா ரத ஊர்வலம் கோவிலை அடைந்தது.
தொடர்ந்து, அம்மனுக்கு, அபிஷேக அலங்கார மலர் வழிபாடு நடந்தது. பகல், 1:30 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை, 6:00 மணிக்கு, அம்மன் கேரளா ரத ஊர்வலத்தில் எழுந்தருளி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதில், கோத்தகிரி வட்டார மலையாள சமூக மக்கள் உட்பட, ஆயிரக்கணக்கான உள்ளூர் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இரவு, 9:00 மணிக்கு, கோத்தகிரி காந்தி மைதானத்தில், வான வேடிக்கை நிகழ்ச்சி இடம் பெற்றது.