/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராமத்தில் உள்ள காட்டு யானைகளை துரத்தும் கும்கிகள்
/
கிராமத்தில் உள்ள காட்டு யானைகளை துரத்தும் கும்கிகள்
கிராமத்தில் உள்ள காட்டு யானைகளை துரத்தும் கும்கிகள்
கிராமத்தில் உள்ள காட்டு யானைகளை துரத்தும் கும்கிகள்
ADDED : செப் 27, 2024 11:47 PM

பந்தலுார்: பந்தலுாரில் காட்டு யானைகளை துரத்தும் பணியில் கும்கிகள் ஈடுபட்டுள்ளன.
--பந்தலுார் அருகே சேரம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், கட்டைக் கொம்பன் மற்றும் 'புல்லட்' ஆகிய இரண்டு யானைகள் ஒன்றாக உலா வருகின்றன. பகல் நேரங்களில் குடியிருப்புகளை ஒட்டிய புதர் பகுதியில், முகாமிடும் இந்த இரண்டு யானைகளும் மாலை, 5:00 மணிக்கு மேல் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.
மேலும், ரேஷன் கடைகள், சத்துணவு கூடங்கள், குடியிருப்புகளை இடித்து அரிசி உள்ளிட்ட, உணவு பொருட்களை ருசிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளன. அதில் புல்லட் என்று அழைக்கப்படும் யானை, மனிதர்களை பார்த்தால் 'புல்லட்' வேகத்தில் தாக்குவதற்கு ஓடிவரும் என்பதால் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் சேரம்பாடி பகுதியில், குடியிருப்புகள் அருகே வந்த இரண்டு யானைகளும், குஞ்சுமுகமது என்பவரை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காட்டு யானைகளை விரட்டும் பணி
தொடர்ந்து, 'இந்த இரண்டு யானைகளையும், கும்கி யானைகள் உதவியுடன் அடர் வனத்திற்குள் விரட்ட வேண்டும்,' என, வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து, கும்கி யானைகள் விஜய் மற்றும் வசீம் ஆகிய யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. நேற்று காலை இந்த இரண்டு கும்கிகளும் கிராமத்தை ஒட்டிய புதர் பகுதியில் முகாமிட்டு இருந்த யானைகளை துரத்தும் பணியில் ஈடுபட்டன.
வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த் ஆகியோர் மேற்பார்வையில், 'ட்ரோன்' கேமரா மூலம் யானைகள் துரத்தம் பணியை ஆய்வு செய்து வருகின்றனர்.
கும்கி யானைகளுடன் வன குழுவினரும், இரண்டு யானைகளையும் துரத்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில்,' இப்பகுதியில் காட்டு யானைகளை துரத்தும் பணி நடந்து வருவதால், யானைகள் எந்த வழியில் வேண்டுமானாலும் வரக்கூடும். எனவே, தேயிலை தோட்டம் வழியாக தனியாக நடப்பதை தவிர்க்க வேண்டும்; காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் வெளியில் மக்கள் வருவதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.