/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானைகளை துரத்த கும்கிகள் தயார்
/
காட்டு யானைகளை துரத்த கும்கிகள் தயார்
ADDED : செப் 26, 2024 11:20 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே சேரம்பாடியில் சுற்றிவரும் காட்டு யானைகளை துரத்துவதற்கு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.
பந்தலுார் அருகே சேரம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 20 யானைகள் முகாமிட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.
அதில், 'புல்லட் மற்றும் கட்டை கொம்பன்' என்று அழைக்கப்படும் இரண்டு யானைகள் ஒன்றாக உலா வருகிறது. இந்த இரண்டு யானைகளும் இரவில் மட்டுமின்றி, பகல் நேரங்களிலும் சாலை மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்து அச்சுறுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் சப்பன்தோடு என்ற இடத்தில் குஞ்சுமுகமது என்பவரை இந்த இரண்டு யானைகளும் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனையடுத்து மக்கள் நடத்திய போராட்டத்தில், 'கும்கி யானைகளை கொண்டு, இரண்டு யானைகளையும் அடர்வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தனர்.
தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானைகள் விஜய் மற்றும் வசீம் ஆகிய யானைகள், சேரம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் சுற்றி வரும் காட்டு யானைகளை துரத்துவதற்கு வரவழைக்கப்பட்டு உள்ளது. இன்று காலை முதல் யானைகளை துரத்தும் பணியில் இரண்டு யானைகளும் ஈடுபட உள்ளன.