/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; ஆக., 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு
/
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; ஆக., 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; ஆக., 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; ஆக., 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 18, 2025 09:12 PM

ஊட்டி; கோத்தகிரி கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கூறப்படும், கேரள மாநிலத்தை சேர்ந்த வாளையார் மனோஜ், நீதிபதி முரளிதரன் முன்னிலையில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
விசாரணை நடத்தி வரும், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நீதிமன்றத்திற்கு வருகை புரிந்தனர். அதேபோல, அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் சார்பில், கூடுதல் சாட்சிகள் இடையே விசாரணை நடத்த வேண்டும் என்பதால், கால அவகாசம் கேட்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், வழக்கு விசாரணையை ஆக., 14ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரிவிட்டார். எதிர்தரப்பு வக்கீல் விஜயன் நிருபர்களிடம் கூறுகையில், ''வழக்கு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடத்தி வரும், 'இன்டர்போல்' விசாரணை குறித்த தகவல்கள், அரசு தரப்பில் நீதிமன்றத்தில் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை.
கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, நடந்துவரும், விசாரணையில் ஏற்படும் காலத்தாமதம் குறித்து, பொதுமக்கள் மற்றும் எதிர்தரப்பு வக்கீல்களுக்கு, அரசு தரப்பு மற்றும் விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர் விளக்கம் அளிக்க வேண்டும்,'' என்றார்.