/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூத்தாண்டவர் கோவில் திருவிழா; காப்பு கட்டி கொண்ட பக்தர்கள்
/
கூத்தாண்டவர் கோவில் திருவிழா; காப்பு கட்டி கொண்ட பக்தர்கள்
கூத்தாண்டவர் கோவில் திருவிழா; காப்பு கட்டி கொண்ட பக்தர்கள்
கூத்தாண்டவர் கோவில் திருவிழா; காப்பு கட்டி கொண்ட பக்தர்கள்
ADDED : ஏப் 04, 2025 10:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; பந்தலுார் அருகே, உப்பட்டி பகுதியில் கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருநங்கைகள் முன்னிலையில் திருவிழா நடத்துவது வழக்கம். நடப்பாண்டு திருவிழா நேற்று காலை சிறப்பு பூஜைகள் மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருநங்கைகள் அமைப்பு நிர்வாகிகள் கார்த்திகா, அம்மு ஆகியோர் தலைமையில், கோவில் பூஜாரி ஆசை பூஜைகள் செய்தார். தொடர்ந்து, பூஜைகள் மற்றும் கள பலியிடுதல், திருநங்கைகள் பங்கேற்கும் தாலி கட்டும் மற்றும் தாலி அறுப்பு நிகழ்வுகளும் நடக்க உள்ளது.
திருநங்கைகள், வனக்காவலர் பிரபு மற்றும் கமிட்டி நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.