/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு
/
பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு
ADDED : பிப் 25, 2024 10:31 PM
மேட்டுப்பாளையம்:காரமடையை அடுத்த புஜங்கனுார் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், சத்தியமூர்த்தி பணி நிறைவு பெற்றதை அடுத்து, பள்ளியில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது.
விழாவுக்கு காளம்பாளையம் ஊராட்சி தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கந்தசாமி முன்னிலை வகித்தார். பள்ளி வேளாண் ஆசிரியர் மணிவண்ணன் வரவேற்றார். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், வெள்ளியங்காடு, சீளியூர், தோலம்பாளையம் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
பள்ளி உதவி தலைமை ஆசிரியர் நிலபர்பேகம் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை தமிழ் ஆசிரியை மோகனாம்பாள் தொகுத்து வழங்கினார்.

