/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் நகராட்சி தலைவர் திடீர் மரணம்
/
குன்னுார் நகராட்சி தலைவர் திடீர் மரணம்
ADDED : பிப் 03, 2024 01:14 AM

குன்னுார்:குன்னுார் நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரின் மரணமடைந்தார்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் அட்டடி பகுதியை சேர்ந்த ஷீலா கேத்ரின், 68. கடந்த, 2022ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில், 6வது வார்டில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்; 2022 மார்ச், 4ம் தேதி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நேற்று முன்தினம் அலுவலகம் வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று மதியம், திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட போது குடும்பத்தினர், குன்னுார் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள், 'அவர் ஏற்கனவே இறந்து விட்டார்,' என, தெரிவித்தனர். இந்த சம்பவம் குன்னுாரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

