சுற்றுலா பயணிகள் குறைவு குன்னுார் வியாபாரிகள் பாதிப்பு
சுற்றுலா பயணிகள் குறைவு குன்னுார் வியாபாரிகள் பாதிப்பு
ADDED : நவ 25, 2026 03:08 PM

அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுாரில் மழை மற்றும் குளிர் காரணமாக, சுற்றுலா பயணிகள் குறைந்து வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.
குன்னுார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (நவ.,25) இரவு பரவலாக மழை பெய்தது. அவ்வப்போது மேகமூட்டம் நிலவி வருவதால், இயல்பு நிலை பாதித்துள்ளது. இதனால், சிம்ஸ் பூங்கா உட்பட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வியாபாரிகள் கூறுகையில்,‘குன்னுார்– மேட்டுப்பாளையம் பாதையில் வாகனங்கள் செல்ல தடையுள்ளதாலும், இங்கு காலநிலை மிகவும் மோசமாக உள்ளதாலும் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது,’ என்றனர்.
