/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பைக் விபத்தில் 'லேப்- டெக்னீஷியன்' பலி; தலை மறைவான பிக்--அப் டிரைவர் கைது

ADDED : ஆக 05, 2025 10:38 PM

குன்னுார்; குன்னுார் மலைபாதையில் காட்டேரி அருகே, பைக்; பிக்--அப் மோதிய விபத்தில், திருமணமாகி, ஐந்து மாதம் ஆன, கரியசோலையை சேர்ந்த லேப்-டெக்னீஷியன் பலியானார்.
கூடலுார் நெலாக்கோட்டை கரியசோலை பகுதியை சேர்ந்தவர் டிராவிட், 25. திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில், தனியார் நிறுவனத்தில் 'லேப் டெக்னீஷியனாக' பணியாற்றி வந்தார்.
இவருக்கும், கூடலுார் ஏழு மரத்தை சேர்ந்த மாரியம்மாள்,23, என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்துள்ளது.
நேற்று முன்தினம் தம்பதியினர் பைக்கில் கூடலுாரில் இருந்து திருப்பூருக்கு சென்றுள்ளனர். குன்னுார் காட்டேரி பால்காரலைன் அருகே வளைவில் சென்றபோது, எதிரே வந்த பிக்--அப் மோதி விபத்துக்குள்ளானதில், தலையில் பலத்த காயமடைந்த டிராவிட் சம்பவ இடத்தில் பலியானார். படுகாயமடைந்த மாரியம்மாள் குன்னுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஊட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்தின் போது, நிறுத்தாமல் சென்ற பிக்--அப் வாகனத்தை குன்னுார் போலீசார் தேடி வந்தனர். தொடர்ந்து, சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, பாலகொலா பகுதியை சேர்ந்த பிக்--அப் டிரைவர் விஷ்ணு, 26, என்பவரை கைது செய்தனர்.