/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டெருமை தாக்கி கூலி தொழிலாளி பலி; உடலை வாங்காமல் மக்கள் போராட்டம்
/
காட்டெருமை தாக்கி கூலி தொழிலாளி பலி; உடலை வாங்காமல் மக்கள் போராட்டம்
காட்டெருமை தாக்கி கூலி தொழிலாளி பலி; உடலை வாங்காமல் மக்கள் போராட்டம்
காட்டெருமை தாக்கி கூலி தொழிலாளி பலி; உடலை வாங்காமல் மக்கள் போராட்டம்
ADDED : பிப் 08, 2024 10:28 PM
கோத்தகிரி: கோத்தகிரி தெங்குமரஹாடா பகுதியில் காட்டெருமை தாக்கி கூலி தொழிலாளி பலியானார்; உடலை வாங்காமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் தெங்குமரஹாடா கிராமம் உள்ளது. இங்கு, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பகுதியை சேர்ந்த குமார், 30, கூலி வேலை செய்வதற்காக வந்துள்ளார்.
நேற்று காலை, 8:00 மணியளவில் குமார் நடந்து சென்றிருந்த போது, காட்டெருமை தாக்கியதில், படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார்.
இது குறித்து, வனத்துறைக்கு கொடுத்த தகவலின் படி, ரேஞ்சர் தீனதயாளன் தலைமையில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, 'வளர்ப்பு வீட்டெருமை தாக்கியதில் தான், குமார் இறந்தார்,' என, தெரிவித்துள்ளனர்.
இதனால், ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தெங்குமரஹாடா ஆரம்ப சுகாதார நிலையம் முன் அமர்ந்து, உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி தாசில்தார் கோமதி, சோலூர்மட்டம் எஸ்.ஐ., வேலுச்சாமி ஆகியோர், பூங்கார் ஊராட்சி தலைவர் காக்கி ராஜன், தெங்குமரஹாடா ஊராட்சி தலைவர் சுகுணா மற்றும் பா.ஜ., நிர்வாகி ஜெயபாலன் முன்னிலையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மக்கள் கூறுகையில், 'இறந்த குமார் குடும்பத்திற்கு, நஷ்டஈடு வழங்க, உயர் அதிகாரிகள் உத்தரவு அளித்தால் மட்டுமே, கலைந்து செல்வோம்,' என்றனர். உடலை வாங்காமல், 7:00 மணி வரையிலும் போராட்டம் நீடித்தது.
ஆனால், உயர் அதிகாரிகள் அங்கு செல்லவில்லை. இதனால், தெங்குமரஹாடா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

