/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நில அளவை இணையதளம் 'தமிழ் நிலம்' மொபைல் செயலி
/
நில அளவை இணையதளம் 'தமிழ் நிலம்' மொபைல் செயலி
ADDED : ஜன 29, 2024 11:47 PM
ஊட்டி;தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரி திட்டத்துறை புதிய இணையதளத்தை உருவாக்கியது.
கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித் திட்டத்துறை, www.tnlandsurvey.tn.gov.in என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், பட்டா மாறுதல் 'தமிழ் நிலம்' மொபைல் செயலி இந்த இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கலாம். உட்பிரிவு மற்றும் உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த 'தமிழ் நிலம்' மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
பட்டா, சிட்டா, பார்வையிட மற்றும் சரிபார்க்க, பதிவிறக்கம் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்பிக்க நிலை விவரங்களை அறிய எங்கிருந்தும், எந்த நேரத்திலும் இணைய வழி சேவை இைணய தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
'ஸ்கேன்' செய்யப்பட்ட கிராம வரைபடங்கள், விற்பனை தொடர்பு விளக்க பட்டியல் விவரங்களை பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகளின் விவரங்கள், முக்கிய அரசாணைகள், சுற்றறிக்கைகள், பரப்பளவு மற்றும் அளவு மாற்றங்களை அறியலாம். எனவே, பொதுமக்கள் இணையதளம் மற்றும் தமிழ் நிலம் செயலி மூலம் விவரங்களை அறிந்து பயன் அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.