ADDED : அக் 24, 2025 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னூர்: குன்னூர் வெலிங்டன் குடியிருப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஒரு வார காலமாக கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களிலும் மண் சரிவு ஏற்பட்டு மரங்களும் விழுந்தன. வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய குடியிருப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. அருகில் இருந்த கோவிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
வீடுகள் பாதிக்காமல் இருக்க இந்த பகுதிகளில் தற்காலிகமாக மண் மூட்டைகள் அடுக்கவும், விரைவில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

