/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை ரயில் பாதையில் நிலச்சரிவு: குன்னூர் வரை மலை ரயில் ரத்து
/
மலை ரயில் பாதையில் நிலச்சரிவு: குன்னூர் வரை மலை ரயில் ரத்து
மலை ரயில் பாதையில் நிலச்சரிவு: குன்னூர் வரை மலை ரயில் ரத்து
மலை ரயில் பாதையில் நிலச்சரிவு: குன்னூர் வரை மலை ரயில் ரத்து
ADDED : ஆக 01, 2024 10:36 AM

குன்னூர் : நீலகிரியில் நள்ளிரவில் பெய்த கன மழையால் குன்னூர் மலை ரயில் பாதையில் ஆடர்லி 14 வது கி.மீ. பகுதியில் மரங்களுடன் சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் நள்ளிரவு கன மழை பெய்தது. இதில் பந்தலூர் அருகே சேரம்பாடி வென்ட்வொர்த் பகுதியில் அதிகபட்சமாக 65 மி.மீ., பதிவானது.குன்னூரில் 10 மி.மீ., பர்லியாரில் 12 மி.மீ., மழையளவு பதிவானது.
குன்னூர் பகுதிகளில் குறைவான மழை பெய்த போதும், மலை ரயில் பாதையில் ஆடர்லி அருகே 14.8வது கி.மீ., பகுதியில் சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள், மண், பாறை கற்கள் தண்டவாளத்தில் விழுந்தது. இந்திலையில, மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7:10 மணிக்கு புறப்பட்டு ஆடர்லி வரை வந்த மலை ரயில் ரத்து செய்யப்பட்டு திரும்பி சென்றது. சீரமைப்பு பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். அதே நேரத்தில் ஊட்டி - குன்னூர் ரயில் பாதிப்பின்றி இயங்குகிறது.