/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார்--ஊட்டி- சாலையில் மண்சரிவு; சீரமைப்பில் நெடுஞ்சாலை துறை மெத்தனம்

ADDED : நவ 06, 2024 09:23 PM

குன்னுார்; குன்னுார் -- ஊட்டி சாலையோரத்தில் அதிகளவில் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.
குன்னுார் - ஊட்டி சாலை விரிவாக்க பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த ஓராண்டிற்கும் மேலாக சாலை பணிகள், தடுப்பு சுவர் அமைப்பது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளின் மெத்தனத்தால் பணிகள் முடிப்பதற்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக, குன்னுார் -- ஊட்டி சாலையில், பாலவாசி, பிளாக் பிரிட்ஜ், அருவங்காடு உட்பட பல இடங்களிலும் தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.
இதே பகுதியில் பெரியளவில் மண்சரிவு ஏற்பட்டு வாகனங்கள் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது. அருவங்காடு சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்த கற்கள் அடித்து செல்லப்பட்டு மிகப்பெரிய குழிகள் ஏற்பட்டுள்ளது.
எனவே, தேசிய நெடுஞ்சாலை துறையினர் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதுடன், உடனடியாக விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும்.