ADDED : அக் 28, 2025 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: குன்னுார் சிம்ஸ்பூங்கா, படகு இல்ல சாலையில் மண்சரிவு ஏற்பட்டது.
குன்னுார் பகுதிகளில் கடந்த வாரம் கன மழை பெய்தது. கடந்த 2 நாட்களாக. வெயிலும், காற்று, லேசான சாரல் மழை நீடித்தது. இதில், சிம்ஸ்பூங்கா படகு இல்லம் சாலையோரத்தில் மண்சரிவு ஏற்பட்டது. பூங்காவின் தடுப்பு வேலி செடிகள் நாசமாகின.
கன மழை பெய்தால், சாலையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கும் நிலை உள்ளது.
தோட்டக்கலை துறையினர் சீரமைப்பு பணிகளை உடனடியாக துவக்க வேண்டும்.

