தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நிலச்சரிவு சீரமைப்பு பணி 100 சதவீதம் நிறைவு: இரு மாவட்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

நிலச்சரிவு சீரமைப்பு பணி 100 சதவீதம் நிறைவு: இரு மாவட்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

நிலச்சரிவு சீரமைப்பு பணி 100 சதவீதம் நிறைவு: இரு மாவட்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு


UPDATED : நவ 24, 2026 05:46 PM

ADDED : நவ 24, 2026 05:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 05:46 PM ADDED : நவ 24, 2026 05:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் பர்லியார் நிலச்சரிவு சீரமைப்பு பணிகள், 100 சதவீதம் நிறைவு பெற்ற நிலையில், இரு மாவட்ட அரசு துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம், 23ல் பெய்த பலத்த மழையால், நீலகிரி மற்றும் கோவை மாவட்ட எல்லைகளுக்கு உட்பட்ட குன்னுார் பர்லியார் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு பஸ் டிரைவர் பலியானார். தொடர் மழையால் மண் ஈரப்பதம் அதிகரித்து, ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு சாலையும், அதன் கட்டமைப்புகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதை தொடர்ந்து கடந்த, 30 நாட்களாக சீரமைப்பு பணிகளுடன், விரிவாக்கமும் நடந்தன. நேற்று கோவை கோட்டத்தில் மேட்டுப்பாளையம் ஆர்.டி.ஓ., வினோத் குமார், நீலகிரி கோட்டத்தில், ஊட்டி மத்திய மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி சோமசுந்தரம் ஆகியோர் தலைமையில் தனி தனியே இரு குழுக்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

சாலையின் தரம் குறித்து ஆய்வு



அதில், நெடுஞ்சாலைத் துறை, காவல்துறை, போக்குவரத்து, வனத்துறை, புவியியல் மற்றும் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் அடங்கிய குழுவினர், சாலையின் தரம், சீரமைப்பு பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒருவழி பாதை உள்ளிட்ட போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வில் ஈடுபட்டனர். ஒருங்கிணைந்து ஆலோசனை நடத்தி, விரிவான அறிக்கையை கோவை, நீலகிரி மாவட்ட கலெக்டர்களுக்கு சமர்ப்பிக்க உள்ளனர்.

நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில், ‘மண் சரிவு மற்றும் சேதமடைந்த சாலை பகுதிகளில் சீரமைப்பு மற்றும் ஆபத்தான பாறைகள் அகற்றும் பணி நடந்தது. 100 சதவீத பணிகள் நிறைவு பெற்று தற்போது சாலை போக்குவரத்திற்கு தகுதியான நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய நெடுஞ்சாலை அமைச்சக அதிகாரிகள், நிலச்சரிவு தடுப்பு நிபுணர்கள் ஆய்வுக்கு பிறகு வாகன போக்குவரத்து குறித்து மாவட்ட நிர்வாகம் இறுதி முடிவு எடுக்கும்,’ என்றனர். இரு நாட்களில் போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us