/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தவளை மலையில் மண்சரிவு அபாயம்; கூடலுாரில் போக்குவரத்திற்கு தடை
/
தவளை மலையில் மண்சரிவு அபாயம்; கூடலுாரில் போக்குவரத்திற்கு தடை
தவளை மலையில் மண்சரிவு அபாயம்; கூடலுாரில் போக்குவரத்திற்கு தடை
தவளை மலையில் மண்சரிவு அபாயம்; கூடலுாரில் போக்குவரத்திற்கு தடை
ADDED : மே 29, 2025 12:53 AM

கூடலுார்: நீலகிரி மாவட்டத்தில், சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் கூடலுார் -- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, தவளைமலை, கொண்டை ஊசி வளைவு அருகே மண் சரிவு ஏற்பட்டது. நடுவட்டம் பகுதி மீட்பு குழுவினர், மண்ணை அகற்றி, முன்னெச்சரிக்கை பணி செய்தனர்.
அப்பகுதியில், ஊட்டி ஆர்.டி.ஒ., சதீஷ்குமார், தாசில்தார் சங்கர் கணேசன், தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வம், உதவி செயற்பொறியாளர் எழில் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆய்வில், மண்சரிவு ஏற்பட்ட மேல்பகுதியில், சில பாறைகள் விழும் அபாய நிலையில் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இரவு நேரம் மற்றும் சுற்றுலா வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ''30 அடி உயரத்தில் உள்ள சில பாறைகள் விழும் ஆபத்து உள்ளதால், கனரக வாகன போக்குவரத்து, ரத்து செய்யப்படுகிறது.
''பகல் நேரத்தில் மட்டும் அரசு பஸ் இயக்கப்படும். ஆம்புலன்ஸ் போன்ற அவசர தேவைக்கான வாகனங்கள் அனுமதிக்கப்படும். உள்ளூர் வாகனங்களை போலீசார் கட்டுப்பாடுடன் அனுமதிப்பர்.
''மண்சரிவு அபாய பகுதியில் அதிகாரிகள், மீட்பு குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்,'' என்றார்.