/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாவரவியல் பூங்காவில் சிறுத்தை, கரடி நடமாட்டம்: மக்களுக்கு பாதுகாப்பு இல்லை : கேமரா பொருத்தி கண்காணிப்பு

ADDED : ஆக 23, 2025 02:57 AM
ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை, கரடி அச்சுறுத்தி வருவதால், நவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வண்ணாரப்பேட்டை, கிளன்ராக், பூங்கா சாலை, சர்வதேச பள்ளி, வானிலை மையம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக சிறுத்தை, கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு கிளன்ராக் பகுதி யில் உலா வந்த சிறுத்தை வளர்ப்பு நாயை வீட்டிற்குள் புகுந்து கவ்வி சென்றது. அதே பகுதியில் இரு வாரங்ரகளில், 10 நாய்களை சிறுத்தை வேட்டையாடி சென்றதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், தாவரவியல் பூங்கா பகுதியில் சிறுத்தை நடமாட்டத்துடன், கரடி நடமாட்டமும் தற்போது அதிகரித்துள்ளது. பூங்கா எதிரே இரவு நேரத்தில் தேநீர் கடைகளை இரவில் சேதப்படுத்திய கரடியால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் ஆய்வு செய்து, இப்பகுதிகளில் தானியங்கி கேமராக்கள் பொருத்தியுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'தாவரவியல் பூங்கா பகுதிகளில் சிறுத்தை, கரடி நடமாட்டம் உள்ளதால், காலை நேரத்தில் 'வாக்கிங்' செல்பவர்கள், மிகவும் முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.
மேலும், இரவில் இப்பகுதியில் உள்ளவர்கள், அவசியம் இல்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்,' என்றனர். நாள்தோறும் வனச்சரகர் ராம்பிரகாஷ் தலைமையில் இரவு நேர ரோந்து பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.