/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுாரில் பிடிபட்ட சிறுத்தை வனத்தில் விடுவிப்பு
/
பந்தலுாரில் பிடிபட்ட சிறுத்தை வனத்தில் விடுவிப்பு
பந்தலுாரில் பிடிபட்ட சிறுத்தை வனத்தில் விடுவிப்பு
பந்தலுாரில் பிடிபட்ட சிறுத்தை வனத்தில் விடுவிப்பு
ADDED : நவ 14, 2025 09:04 PM

பந்தலுார்: பந்தலுார் இரும்புபாலம் பகுதியில் பிடிக்கப்பட்ட சிறுத்தை, நாடுகாணி வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
பந்தலுார் பஜார் பகுதியை ஒட்டிய, இரும்புபாலம் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில், ராஜலிங்கம் என்பவரின் தேயிலை தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலியில், கடந்த, 13-ம் தேதி இரவு, 5- வயது பெண் சிறுத்தை சிக்கியது.
இதனை நேற்று முன்தினம் கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் மயக்க ஊசி செலுத்திய பின்னர் பிடிக்கப்பட்டது. சிறுத்தை தேவாலா வனச்சரக அலுவலகத்தில் வைத்து கண்காணிக்கப்பட்டது.
சிறுத்தையின் உடல் நலம் நேற்று காலை பரிசோதனை செய்யப்பட்டதி ல், நல்ல நிலையில் இருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து நாடுகாணி வனப்பகுதியில் சிறுத்தை விடுவிக்கப்பட் டது.