/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தனியார் தோட்டத்தில் சிறுத்தை குட்டி உயிரிழப்பு
/
தனியார் தோட்டத்தில் சிறுத்தை குட்டி உயிரிழப்பு
ADDED : ஜூலை 22, 2025 09:29 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே தனியார் தோட்டத்தில் இரு சிறுத்தைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ராக்வுட் அமைந்துள்ளது.
இந்த பகுதியில் உள்ள தனியார் தோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில், நேற்று சிறுத்தை குட்டி ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனச்சரகர் ரவி, வனவர் சுதீர் குமார் உள்ளிட்டேர் சென்று ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழந்தது ஒரு வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை குட்டி என்பது தெரியவந்தது. இதே பகுதியில் ஏற்கனவே ஒரு சிறுத்தை உயிரிழந்துள்ள நிலையில், தற்போது, சிறுத்தை குட்டி உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'உயிரிழந்த பெண் சிறுத்தை குட்டியை பிரேத பரிசோதனை செய்து அறிக்கை பெற்ற பின்னரே, உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்,' என்றனர்.

