ADDED : ஜூலை 17, 2026 05:18 AM
அ நிறம் | அளவு
கூடலுார்: முதுமலை புலிகள் காப்பகம் கக்கநல்லா ஆற்றில், அழுகிய நிலையில் சிறுத்தை இறந்து கிடப்பது தெரிய வந்தது.
சிறுத்தையின் உடலை துணை இயக்குனர் கணேசன், வனச்சரகர்கள் சிவக்குமார், பாஸ்கரன் ஆய்வு செய்தனர். முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்தார். வனத் துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் சிறுத்தைக்கு, 4 வயது இருக்கும். இரண்டு சிறுத்தைகள் இடையே ஏற்பட்ட மோதலில், காயமடைந்து சிறுத்தை இறந்திருக்கலாம். ஆய்வுக்காக உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன், அறிக்கை கிடைத்த பின்பே, இறந்ததற்கான காரணம் தெரிய வரும்,' என்றனர்.
