/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேண்டீனுள் புகுந்த சிறுத்தை; அலறியடித்து ஓடிய ஊழியர்கள்
/
கேண்டீனுள் புகுந்த சிறுத்தை; அலறியடித்து ஓடிய ஊழியர்கள்
கேண்டீனுள் புகுந்த சிறுத்தை; அலறியடித்து ஓடிய ஊழியர்கள்
கேண்டீனுள் புகுந்த சிறுத்தை; அலறியடித்து ஓடிய ஊழியர்கள்
ADDED : செப் 30, 2025 10:02 PM
கோத்தகிரி; கோத்தகிரி அருகே தனியார் கேன்டீனுள் சிறுத்தை நுழைந்ததால், ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.
கோத்தகிரி ஈளாடா பகுதியில் தனியார் ஸ்டேட் அமைந்துள்ளது. இப்பகுதியில் சிறுத்தை உட்பட, வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவை, அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறி, தேயிலைத் தோட்டங்களில் பதுங்கி, அவ்வப்போது வெளியே வருவது தொடர்கிறது.
இந்நிலையில், தனியார் எஸ்டேட் கேண்டீன் வளாகத்தில், பூனை நடமாடியுள்ளது. அந்த வளாகத்தில், நோட்டமிட்டிருந்த சிறுத்தை, பூனையை பிடிக்க தாவியுள்ளது. பூனை அங்கிருந்து கேன்டீனுள் ஓடவே, சிறுத்தையும் துரத்தி திடீரென உள்ளே நுழைந்துள்ளது. இதனால், அச்சமடைந்த ஊழியர்கள் உயிர்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராவில் இந்த நிகழ்வு பதிவாகி வைரலாகி வருகிறது. எனவே, சிறுத்தையை தொடர்ந்து கண்காணித்து கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக் கை எடுக்க வேண்டும்.