/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மணியட்டி சாலையில் சிறுத்தை நடமாட்டம்
/
மணியட்டி சாலையில் சிறுத்தை நடமாட்டம்
ADDED : டிச 15, 2025 06:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி: 'கோத்தகிரி ஒன்னதலை - டி.மணியட்டிசாலையில் தேயிலை தோட்டங்களும் அருகில் வனப்பகுதி உள்ள தால், வனவிலங்குகளில் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஒன்னதலை பகுதியில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலை பகுதியில் சிறுத்தை நடமாடியது, அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி சமூக வலைதளங் களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து ஒரே இடத்தில், அங்கும் இங்கும் சாலை யில் நடமாடும் சிறுத்தையால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். தகவல் அறிந்த வனத்துறையினர், சிறுத்தையை கண்காணித்து வருவதுடன், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தினர்.

