ADDED : ஜூலை 18, 2026 08:19 PM

அ நிறம் | அளவு
பாலக்காடு: பாலக்காடு அருகே, பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு சீரணி பகுதியில் கடந்த சில நாட்களாக, ஒரு சிறுத்தை மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று இரவு கூண்டினுள் வைக்கப்பட்டிருந்த இரையை பிடிக்க வந்த சிறுத்தை, கூண்டில் சிக்கியது. தகவல் அறிந்த மக்கள் நிம்மதியடைந்தனர்.
சிறுத்தையை அங்கிருந்து வனத்துறை மையத்துக்கு கொண்டு சென்று, அதன் உடல்நிலையை பரிசோதனை செய்தனர். இரண்டு வயது மதிக்கத்தக்க, அந்த சிறுத்தையை பரம்பிக்குளம் வனப்பகுதியில் விடப்போவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
