ADDED : நவ 29, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
குன்னூர்: குன்னூரில் 2 நாட்களாக கன மழை பெய்த நிலையில், இன்று (நவ.,29) சற்று குறைந்தது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இரவில் கனமழை பெய்து வருகிறது. இன்று குன்னூர் பகுதியில் மழையின் தாக்கம் சற்று குறைந்தது.
அதிகபட்சமாக கிண்ணக்கொரை, 78, எடப்பள்ளி, 71, பர்லியார், 54, கெத்தை, 40, கீழ் கோத்தகிரி, 28, குன்னூர், 25, உலிக்கல், 22 குந்தா, 20, பாலக்கொலா, 18 மி.மீ. என மழையளவு பதிவானது.
