/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆற்றில் இறங்கி போராடுவோம்; கவுன்சிலர்கள் எச்சரிக்கை
/
ஆற்றில் இறங்கி போராடுவோம்; கவுன்சிலர்கள் எச்சரிக்கை
ஆற்றில் இறங்கி போராடுவோம்; கவுன்சிலர்கள் எச்சரிக்கை
ஆற்றில் இறங்கி போராடுவோம்; கவுன்சிலர்கள் எச்சரிக்கை
ADDED : மார் 13, 2024 10:13 PM

மேட்டுப்பாளையம், : திருப்பூர் மூன்றாவது குடிநீர் திட்டத்தில் தண்ணீர் எடுப்பதற்காக, பவானி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கற்களை அகற்றாவிட்டால், ஆற்றில் இறங்கி போராடுவோம் என மேட்டுப்பாளையம் நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 20 ஆயிரம் குடும்பங்கள் என சுமார் 80 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். மேட்டுப்பாளையம் நகரத்திற்கு, மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் பவானி ஆற்றிலிருந்து தினசரி 14 எம்.எல்.டி. வரை தண்ணீர் எடுத்து, சாமன்னா தலைமை நீரேற்று நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
மேட்டுப்பாளையம் மக்களின் மிகவும் முக்கிய குடிநீர் ஆதராமாக உள்ள பவானி ஆறு மிகவும் வேகமாக வறண்டு வருகிறது.இதனால் மேட்டுப்பாளையத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனிடையே சாமன்னா நீரேற்று நிலையத்திற்கு அருகில் மேல் பகுதியில் திருப்பூர் மூன்றாவது குடிநீர் திட்டத்திற்கான தண்ணீர் பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. இதற்காக பவானி ஆற்றில் தடுப்பு கற்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கற்களால் சாமன்னா நீரேற்று நிலையத்திற்கு வரும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்துள்ளது.
இதனை நேற்று அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சலீம், தனசேகரன், சுனில் குமார், மீரா மைதீன், முத்துசாமி, மருதாசலம், குருபிரசாத் ஆகிய 7 பேர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து அ.தி.மு.க., கவுண்சிலர்கள் கூறுகையில், கோடை காலம் நெருங்கும் முன்னரே மேட்டுப்பாளையத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. சாமன்னா நீரேற்று நிலையத்திற்கு கற்கள் தடுப்பினால் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்த கற்கள் தடுப்பை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் ஆற்றில் இறங்கி போராடுவோம், என்றனர்.

