/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ' சமத்துவம் காண்போம்' போட்டிகள்
/
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ' சமத்துவம் காண்போம்' போட்டிகள்
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ' சமத்துவம் காண்போம்' போட்டிகள்
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ' சமத்துவம் காண்போம்' போட்டிகள்
ADDED : ஏப் 14, 2025 06:45 AM
ஊட்டி : ஊட்டியில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, 10ம் தேதி முதல், 30ம் தேதிவரை, 'சமத்துவம் காண்போம்' போட்டிகள் நடத்தப்படுகிறது.
அதில், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில், சமூக வலைதளங்களில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.
இதில், வெற்றி பெறுபவர்களுக்கு, செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்குகிறார்.
இந்த போட்டிகளில்,' ஒரு கதை சொல்லட்டுமா, ஓவியம் வரைதல் போட்டி, வினாடி-வினா போட்டி, மீம்ஸ் போட்டிகள், வலையொலி, உரிமைகளுக்கான பாடல், செல்பி மற்றும் ஹாஷ்டாக் போட்டி, சமூக ஊடகங்களின் மூலம் விழிப்புணர்வு,' போன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது.
பங்கேற்பவர்கள், 'வாட்ஸ்-ஆப்' ஸ்டேடஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் படைப்புகளில், அம்பேத்கரின் மேற்கோள்கள் அல்லது அரசியலமைப்பின் முன்னுரையை பதிவிட வேண்டும். பகிரப்பட்டதன் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தங்களின் படைப்புகளை, tndiprmhsamathu vamkanbom@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக, 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.