தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'இயற்கை பாதுகாப்புக்கு ஒன்றிணைவோம்'

'இயற்கை பாதுகாப்புக்கு ஒன்றிணைவோம்'

'இயற்கை பாதுகாப்புக்கு ஒன்றிணைவோம்'


UPDATED : ஜூன் 07, 2026 02:43 PM

ADDED : ஜூன் 07, 2026 02:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2026 02:43 PM ADDED : ஜூன் 07, 2026 02:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலூர்:பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், எஸ்.ஒய்.எஸ். ஆறுதல் அமைப்பு சார்பில், 'நம்முடைய பூமி, நம்முடைய பொறுப்பு' தலைப்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தலைமை வகித்தார். எம். எல். ஏ. திராவிட மணி பேசுகையில், ''இயற்கை வளங்கள் நிறைந்த பூமியில், மனித சமுதாயம் அதனை அழிப்பதால், இயற்கை பாதிக்கப்படுவது மட்டுமின்றி, அதனை சார்ந்துள்ள மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் பாதிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதிப்பால் இரண்டாவது சிரப்புஞ்சி என்ற பெயர் பெற்ற இந்த பகுதியில், குடிநீருக்காக திண்டாடும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஆகவே அனைவரும் ஒன்றிணைந்து, இயற்கையை பாதுகாப்பு, வன வளங்களை அதிகரிக்க செயல்பட வேண்டும்.'' என்றார்.

பள்ளி வளாகம்,பந்தலூர் சுற்றுப்பகுதியில், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. அமைப்பின் நிர்வாகி ஷாஜகான், சலாம் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us