பந்தலுாரில் நுாலக வார விழா வாதிப்பு திறன் குறித்து விளக்கம்
பந்தலுாரில் நுாலக வார விழா வாதிப்பு திறன் குறித்து விளக்கம்
UPDATED : நவ 18, 2026 06:45 PM
ADDED : நவ 18, 2026 06:42 PM

பந்தலுார்: பந்தலுார் நுாகத்தில் நடந்த நுாலக வார விழாவில், வாசிப்பு திறன் குறித்து விளக்கப்பட்டது.
பந்தலுார் நுாலகத்தில், 59 ஆவது தேசிய நுாலக வார விழாவை முன்னிட்டு, புத்தக கண்காட்சி மற்றும் வாசிப்பு திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, நுாலகர் நித்திய கல்யாணி தலைமை வகித்தார். நுாலகர் அறிவழகன், வாசகர் வட்ட நிர்வாகி சிவசுப்ரமணியம், வருவாய்த்துறை உதவியாளர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.
சமூக ஆர்வலர் காளிமுத்து கண்காட்சியை துவக்கி வைத்து பேசுகையில்,‘‘கடந்த காலங்களில் வாசிப்பு என்பது மக்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், தற்போது வாசிப்பு என்பது மக்கள் மத்தியில் இயலாத காரியமாக மாறி உள்ளது. ‘ஆன்லைன்’ வாயிலாக தகவல் பரிமாற்றங்கள் மற்றும் அதனை சார்ந்த ஆர்வம் காரணமாக, தினசரி நாட்டு நடப்புகளை கூட தெரிந்து கொள்ளாத சமுதாயமாக மாறி வருவது வேதனை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மாணவர்கள் நுாலகம் வருவதுடன் வாசிப்பு திறனை வளர்த்து கொண்டால் நினைவாற்றல் அதிகரித்து எதிர்காலத்தில் போட்டி தேர்வுகளில் சாதிக்க வழி ஏற்படுத்தும்,’’ என்றார். தொடர்ந்து, மாணவர்கள் பலரும் நுாலக உறுப்பினர்களாக தங்களை பதிவு செய்து கொண்டனர்.
