தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கிடப்பில் போடப்பட்ட நுாலக கட்டட பணி: உள்ளூர் வாசகர்கள் கடும் அதிருப்தி

கிடப்பில் போடப்பட்ட நுாலக கட்டட பணி: உள்ளூர் வாசகர்கள் கடும் அதிருப்தி

கிடப்பில் போடப்பட்ட நுாலக கட்டட பணி: உள்ளூர் வாசகர்கள் கடும் அதிருப்தி


UPDATED : அக் 16, 2026 04:29 AM

ADDED : அக் 16, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 04:29 AM ADDED : அக் 16, 2026 04:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்:

கூடலுாரில் இடிந்து விழுந்த நுாலக கட்டடத்திற்கு மாற்றாக, 1.25 கோடி ரூபாயில் புதிய கட்டடப்பணிகள் துவங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டதால் வாசகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கூடலுார், ஊட்டி தேசிய நெடுஞ்சாலை எஸ்.பி.ஐ., வங்கி அருகே நுாலகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பழமையான கட்டடம், 2022 ஆக., மாதம் பெய்த பலத்த மழையின் போது இடிந்து விழுந்து சேதமடைகிறது.

அதனுள் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் சிக்கியது. அதில், 90 ஆயிரம் புத்தகங்கள் மீட்கப்பட்டு, தனியார் கட்டடத்தில் வைக்கப்பட்டது. கட்டட வசதி இல்லாத, நுாலகம் தனியார் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடத்துக்கு மாறாக புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், அரசு சார்பில் புதிய நுாலக கட்டடம் கட்ட, 1.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த டிச., மாதம் பணிகள் துவங்கப்பட்டன. முதல் கட்டமாக அப்பகுதியில் மண் அகற்றப்பட்டு சமன் செய்யப்பட்டது. தொடர்ந்து, 10 மாதமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் செடிகள் வளர்ந்து முட்புதர் போன்று காணப்படுகிறது. அப்பகுதி திறந்தவெளி கழிப்பிடமாக மாறி உள்ளது. இதனால், வாசகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மாவட்ட நுாலக அலுவலர் கிளமென்ட் கூறுகையில், ‘‘அப்பகுதியில், தடுப்பு சுவருடன், 1,000 சதுர அடியில் புதிய நுாலகம் கட்டடம் கட்ட, 1.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்காக அப்பகுதி சமன் செய்யப்பட்டுள்ளது. இட வசதி போதுமானதாக இல்லை என்பதால், தற்போது, 3,000 சதுர அடியில் புதிய நுாலகம் கட்டடம் கட்டுவது தொடர்பாக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு நிதி கிடைத்தவுடன் கட்டடப்பணிகள் துவங்கப்படும்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us