தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்கள் ஆயுத பூஜை நடத்தி வழிபாடு

உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்கள் ஆயுத பூஜை நடத்தி வழிபாடு

உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்கள் ஆயுத பூஜை நடத்தி வழிபாடு


ADDED : அக் 21, 2026 01:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2026 01:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுாரில் உயிர் காக்கும், 108 ஆம்புலன்ஸ்களுக்கு, ஆயுத பூஜை செய்து மலர்களால் அலங்கரித்து ஊழியர்கள் பக்தியுடன் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

ஆயுத பூஜை திருநாளை முன்னிட்டு, குன்னுாரில் அரசு லாலி மருத்துவமனையில் செயல்படும், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனைத்தும் துாய்மை செய்யப்பட்டு, சந்தனம், குங்குமம் பொட்டிட்டு, வண்ண மலர் மாலைகள் மற்றும் வாழை மரங்கள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன.

தீயணைப்பு நிலைய விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி,108 ஆம்புலென்ஸ்களுக்கும் சிறப்பு பூஜை போடப்பட்டது. ‘நோயாளிகளையும், பொதுமக்களையும் உரிய நேரத்தில் பத்திரமாக மீட்டு செல்ல வேண்டும்,‘ என, வேண்டி ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர்கள் ஒன்றிணைந்து தீபாராதனை காட்டி கூட்டு பிரார்த்தனை மேற்கொண்டனர். பூஜை நிறைவில் பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us