ADDED : செப் 26, 2025 08:56 PM
ஊட்டி:
'காந்தி ஜெயந்தி அன்று (அக்.,2) மதுக்கடைகள் செயல்படாது,' என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மதுபான சில்லறை விற்பனை கடைகள், கிளப் பார்கள், ஹோட்டல் பார்களில் வரும், 2ம் தேதி, காந்திஜெயந்தி அன்று எவ்வித மதுபானமும் விற்பனை செய்யப்பட மாட்டாது. கட்டாயமாக டாஸ்மாக் கடைகள் மற்றும் தமிழ்நாடு ஹோட்டல் பார்கள் மூடப்பட்டிருக்கும்.
இந்த உத்தரவை மீறி, எவரேனும் மதுபானங்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மது விற்பனை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம், 1937 மற்றும் சம்பந்தப்பட்ட இதர விதிகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குறிப்பிட்ட நாளில், டாஸ்மாக் மதுகடைகள் மற்றும் பார்கள் திறந்திருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் தெரியும் பட்சத்தில், அந்த விபரத்தை தெரிவிக்கலாம். அதன்படி, ஊட்டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு மற்றும் அமலாக்கம், 0423 2223802; மாவட்ட உதவி ஆணையர் (ஆயம்) 0423 2443693; குன்னுார் எடப்பள்ளி டாஸ்மாக் மாவட்ட மேலாளர், 0423 2234211 ஆகிய எண்களில் தெரியப்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.