/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நகர சாலையில் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு
/
நகர சாலையில் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு
நகர சாலையில் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு
நகர சாலையில் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு
ADDED : ஏப் 14, 2025 09:52 PM

கோத்தகிரி, ; கோத்தகிரி நகர சாலையில், நாள்தோறும் கால்நடைகள் உலா வருவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், கோடை விழா நெருங்கி வரும் நிலையில், சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தவிர, உள்ளூர் மக்கள் பயன் படுத்தும் வாகனங்களில் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், சமீப காலமாக. நகர சாலைகளில், கால்நடைகள் உலா வருவது அதிகரித்துள்ளது. சாலையில் நீண்ட நேரம், அங்குமிங்கும் சுற்றித் திரியும் கால்நடைகளால், குறுகிய சாலையில், வாகனங்கள் இயக்குவது சவாலாக உள்ளது.
கால்நடைகள் பெரும்பாலான நேரங்களில், சாலையில் படுத்து விடுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் வருவோர், விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர், அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.