சுற்றித்திரியும் கால்நடைகள் பொதுமக்களுக்கு பாதிப்பு: போக்குவரத்து, பொதுமக்களுக்கு பாதிப்பு
சுற்றித்திரியும் கால்நடைகள் பொதுமக்களுக்கு பாதிப்பு: போக்குவரத்து, பொதுமக்களுக்கு பாதிப்பு
UPDATED : நவ 04, 2026 10:32 AM
ADDED : நவ 04, 2026 10:30 AM

ஊட்டி:
ஊட்டி நகரில் கால் நடைகள் உலா வருவதால் அடிக்கடி வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
சர்வதேச சுற்றுலா தலமான, ஊட்டியில் நாள்தோறும் திரளான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். சீசன் சமயங்களில் வழக்கத்தை விட அதிகளவிலான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நகரில் பஸ் ஸ்டாண்ட், ெமயின்பஜார், அப்பர் பஜார், ஐந்துலாந்தர், மாரியம்மன் கோவில், கமர்சியல் சாலை, மார்க்கெட் சாலை, ஸ்பென்சர் சாலை, தாவர வியல் பூங்கா, சேரிங்கிராஸ் பகுதியில் காலை , மாலை நேரங்களில் அதிகளவில் குதிரை , வளர்ப்பு எருமை என கால்நடைகள் உலா வருவதால், வாகன ஓட்டிகளுக்கு வாகனங்கள் இயக் குவதில் சிரமம் ஏற்படுகின்றது. சில நேரங்களில் கால் நடைகள் சாலையில் ஓடி வருதால் பாதசாரிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பொது மக்கள் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கால்நடை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
