/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் நடமாடும் கால்நடைகள்; போக்குவரத்துக்கு இடையூறு போக்குவரத்துக்கு இடையூறு

ADDED : நவ 26, 2024 10:10 PM

கோத்தகிரி; கோத்தகிரி -கட்டபெட்டு இடையே, சாலையில் நடமாடும் கால்நடைகளால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
கோத்தகிரி - கட்டபெட்டு பகுதியில் அரசு பஸ்கள் உட்பட, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சமீப காலமாக, கால்நடைகளின் நடமாட்டம் சாலையில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, அரசு போக்குவரத்து கழக அலுவலக பகுதியில், கால்நடைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், வாகனங்கள் சென்று வருவதில் பாதிப்பு அதிகரித்துள்ளது. வாகனங்கள் வரும்போது, கால்நடைகள் அங்கும், இங்கும் ஓடுவதால், விபத்து அபாயமும் உள்ளது. கடந்த காலங்களில், இதே பகுதியில் கால்நடைகளால் விபத்து ஏற்பட்டு, இருசக்கரத்தில் சென்ற ஒருவர் பலியான சம்பவம் நடந்துள்ளது.
எனவே, கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதுடன், அவைகளின் உரிமையாளர்களுக்கு, அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.