/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி மலர் கண்காட்சிக்கு உள்ளூர் விடுமுறை
/
ஊட்டி மலர் கண்காட்சிக்கு உள்ளூர் விடுமுறை
ADDED : மே 13, 2025 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி, ; ஊட்டி மலர் கண்காட்சியை முன்னிட்டு, 15ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி மலர் கண்காட்சி வரும், 15ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. மலர் கண்காட்சிக்காக புல் மைதானத்தில் மேடை உட்பட பல்வேறு மலர் அலங்கார அமைப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், வண்ண மயமான மலர் கண்காட்சி துவங்கும், 15ம் தேதி, நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதை ஈடு செய்யும் வகையில், 31ம் தேதி வேலை நாளாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.