/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி பூங்கா நடைப்பாதையில் இடையூறாக மரத்துண்டுகள்; சுற்றுலா பயணியர் அவதி

ADDED : செப் 23, 2024 10:29 PM

ஊட்டி : தாவரவியல் பூங்கா நடைப்பாதையில் இடையூறாக வைக்கப்பட்டுள்ள மரத்துண்டுகளால் மக்கள் சாலையில் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் மழை, பலத்த காற்றுக்கு நுாற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் விழுந்து இடையூறு ஏற்படுத்தி வந்தன. அபாயகரமான மரங்கள் படிப்படியாக அகற்றப்பட்டு வருகிறது. அதன்படி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையில் இருந்த அபாயகரமான மரங்கள் வெட்டப்பட்டன. அகற்றப்பட்ட மரங்கள், மரக்கிளைகள் நடைப்பாதையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களில் தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள், நடைப்பாதையில் மரங்கள் இருந்ததால் சாலையில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எனவே, சம்மந்தப்பட்ட துறையின் ஆய்வு மேற்கொண்டு நடைப்பாதையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள மரத்துண்டுகளை அப்புறப்படுத்த வேண்டும்.