தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நம்பலாக்கோடை சிவன் மலை தீபம் ஏற்றி பக்தர்கள் பரவசம்

நம்பலாக்கோடை சிவன் மலை தீபம் ஏற்றி பக்தர்கள் பரவசம்

நம்பலாக்கோடை சிவன் மலை தீபம் ஏற்றி பக்தர்கள் பரவசம்


ADDED : நவ 24, 2026 07:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2026 07:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்:

கூடலுார் நம்பலாக்கோட்டை சிவன் மலையில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கூடலுார் நம்பாலக்கோட்டை சிவன்மலை சிவன் கோவிலில் மகா கார்த்திகை தீபம் திருவிழா இன்று (நவ.,24) காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை, 5:00 மணிக்கு துவங்கிய கிரிவலம் ஊர்வலத்தில் பக்தர்கள் 'ஓம் நமச்சிவாயா' என்று கோஷம் எழுப்பி மலையை சுற்றி வந்தனர். ஊர்வலம் கோவிலில் நிறைவடைந்தது. மாலை, 6:00 மணிக்கு சிவன்மலை வளர்ச்சி சமூக நல அறக்கட்டளை தலைவர் கேசவன் முன்னிலையில், நடராஜ் மாஸ்டர் மகா தீபத்தை ஏற்றினர். பக்தர்கள் தீபத்தை வணங்கி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பத்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை சிவன்மலை வளர்ச்சி குழு, சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us