தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/‘பாரம் தாங்காமல் 500 அடி பள்ளத்தில் உருண்ட லாரி’

‘பாரம் தாங்காமல் 500 அடி பள்ளத்தில் உருண்ட லாரி’

‘பாரம் தாங்காமல் 500 அடி பள்ளத்தில் உருண்ட லாரி’


ADDED : நவ 01, 2026 04:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2026 04:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரி அருகே, 500 அடி பள்ளத்தில் உருண்டு, லாரி விபத்துக்குள்ளானதில். டிரைவர் குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.

ஊட்டியில் இருந்து, மரம் லோடு ஏற்றிய லாரி, மேட்டுப்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தது. இன்று (நவ.,1) காலை, 7:00 மணியளவில் மேகமூட்டத்துடன், கனமழை பெய்தது.

அப்போது, அருங்காடு பகுதியை சேர்ந்த, டிரைவர் அருண், 'மழை ஓய்ந்த பின்பு செல்லலாம்' என, கட்டபெட்டு பஜார் பகுதியில், லாரியை ஒரமாக நிறுத்தியுள்ளார். சாலை விரிவாக்கத்திற்காக மண் கொட்டப்பட்ட பகுதி என்பதால், பாரம் தாங்காமல், லாரி சாய்ந்துள்ளது.

சுதாரித்துக் கொண்ட டிரைவர், கிரேனை வர வழைத்து, லாரியை தாங்கி, மரக்கட்டைகளை இறக்குவதற்காக முயன்றுள்ளார். அப்போது, கனமழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால், கிரேனின் பிடி தளர்ந்து, லாரி இடது பக்கமாக சாய்ந்து, 500 அடி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது.

லாரி டிரைவர் வலது பக்கமாக குதித்து, அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். பள்ளத்தில் விழுந்த மரங்கள் கிரேன் உதவியுடன், சாலைக்கு கொண்டுவரப்பட்டது. கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us