/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அடிப்படை வசதிகள் இல்லாமல் கீழ்தலையாட்டு மந்து மக்கள் அவதி
/
அடிப்படை வசதிகள் இல்லாமல் கீழ்தலையாட்டு மந்து மக்கள் அவதி
அடிப்படை வசதிகள் இல்லாமல் கீழ்தலையாட்டு மந்து மக்கள் அவதி
அடிப்படை வசதிகள் இல்லாமல் கீழ்தலையாட்டு மந்து மக்கள் அவதி
ADDED : பிப் 17, 2025 10:29 PM

ஊட்டி; ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட, 33வது வார்டு கீழ் தலையாட்டு மந்து பகுதியில் நடைபாதை மற்றும் தடுப்பு சுவர் அமைத்து தரக்கோரி, அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட, 33 வது வார்டு கீழ்தலையாட்டு மந்து பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் பெய்த பருவமழையின் போது, குடியிருப்பின் அருகே மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் மற்றும் நடைபாதைகள் முற்றிலும் இடிந்து சேதமடைந்தன.
இந்நிலையில், மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிக நடைபாதை அமைக்கப்பட்டது. மீண்டும் கடந்தாண்டு பெய்த மழையின் போது, நடைபாதை முற்றிலும் இடிந்து சேதமடைந்தது.
பாதை இல்லாததால் குடியிருப்பு வாசிகள் மாலை நேரங்களில் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, இரவில் அவசர தேவைகளுக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தடுப்பு சுவர் மற்றும் நடைபாதை வசதி அமைத்து தரக்கோரி, ஊட்டி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், 'மாவட்ட கலெக்டர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு உடனடியாக நடைபாதை மற்றும் தடுப்பு சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.

