/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரவில் தென்பட்ட 'லுானா' அந்துப்பூச்சி; பார்த்து வியந்த உள்ளூர் மக்கள்

ADDED : அக் 09, 2024 10:07 PM

கூடலுார் : கூடலுாரில், இரவில் தென்பட்ட அந்துப்பூச்சி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
கூடலுார் பகுதியில், பட்டாம்பூச்சி போன்று வடிவம் கொண்ட அந்துப்பூச்சிகளை இரவில் மட்டுமே காண முடியும். அதில், சில அந்துப்பூச்சிகள், அளவிலும், வடிவிலும் வித்தியாசமாக தென்படும்.
இந்நிலையில், மரப்பாலம் பகுதியில் உள்ள தெருவிளக்கு அருகே 'லுானா' எனப்படும் அந்துப்பூச்சி பறந்து கொண்டிருந்தது. அதனை, மக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர். வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், 'இதனை 'இந்தியன் லுானா' அந்துப்பூச்சி என்று அழைக்கின்றனர். இதனை இரவில் மட்டுமே காண முடியும். இதன் இறக்கையில் பிறை போன்ற பெரிய கண் வடிவில் புள்ளிகள் உள்ளது. அதிக உணர்திறன் வாய்ந்தது. ஒரு வாரம் மட்டுமே உயிர் வாழும்,' என்றனர்.