/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மகா சிவராத்திரி பெரு விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
மகா சிவராத்திரி பெரு விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
மகா சிவராத்திரி பெரு விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
மகா சிவராத்திரி பெரு விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : மார் 09, 2024 07:19 AM

ஊட்டி : ஊட்டி அருள்மிகு விசாலாட்சியம்மன் உடனமர் காசி விஸ்வநாத பெருமான் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது.
ஊட்டி காந்தள் பகுதியில் உள்ள பழமையான, அருள்மிகு விசாலாட்சியம்மன் உடனமர் காசி விஸ்வநாத பெருமான் கோவிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது.
விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காந்தள் மகளிர் வழிபாட்டு குழு சார்பில், திருவிளக்கு வழிபாடு நடந்தது.
நேற்று காலை, 7:00 மணிக்கு, கால சந்தி பூஜை, 11:00 மணிக்கு உச்சக்கால பூஜை, 11:30 மணிக்கு அன்னதானம், பிற்பகல், 2:00 மணிக்கு, விநாயகர் வழிபாடு யாக பூஜை நடந்தது.
தொடர்ந்து, மாலை, 3:30 மணிக்கு, மகா பிரதோச வழிபாடு; யாக பூஜை சிறப்பாக நடந்தது. 5:00 மணிக்கு, மகா தீபாராதனை, 6:00 மணிக்கு சுவாமி திருக்கோவில் திரு உலா நடந்தது. தொடர்ந்து, பஜனை, ஆடல் பாடல், பட்டிமன்றம் நடந்தது. இரவு, 11:00 மணிக்கு மேல் பக்தி திரைப்படம் வெளியிடப்பட்டது.
* இதேபோல், கோத்தகிரி அஜ்ஜூர் ஸ்ரீ பாண லிங்கேஷ்வரர் திருக்கோவிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு காலை முடி காணிக்கை செலுத்தும் நிகழ்வு நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, பிரதோஷ வழிபாடு நடந்தது. 6:00 மணிக்கு முதல், ஐந்து கால அபிஷேக அலங்கார பூஜையும், 108 அபிஷேக ஆராதனையும் நடந்தது. இந்த விழாக்களில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

