/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி மின் நிலையங்களில் பராமரிப்பு பணி; கோடையை சமாளிக்க நடவடிக்கை
/
நீலகிரி மின் நிலையங்களில் பராமரிப்பு பணி; கோடையை சமாளிக்க நடவடிக்கை
நீலகிரி மின் நிலையங்களில் பராமரிப்பு பணி; கோடையை சமாளிக்க நடவடிக்கை
நீலகிரி மின் நிலையங்களில் பராமரிப்பு பணி; கோடையை சமாளிக்க நடவடிக்கை
ADDED : மார் 13, 2024 10:04 PM
ஊட்டி : நீலகிரி மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில், குந்தா, பைக்காரா மின் வட்டத்தின் கீழ், 12 மின் நிலையம், 13 அணைகள் உள்ளன. இவைகளில், நாள்தோறும், 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும். கடந்தாண்டில், பருவமழை பொய்த்ததால், அணைகளில் தண்ணீர், 30 சதவீதம் மட்டுமே இருப்பில் உள்ளது.
இங்கு உற்பத்தி செய்யும் மின்சாரத்தில், 70 சதவீதம் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வெளிமாவட்டங்களில் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் மின்தேவை அதிகரித்துள்ளது. பொதுவாக, ஜன., மாதம் முதல் மே வரை கோடையில் மின் தேவை அதிகரிக்கும்.
இதனை எதிர்கொள்ளும் வகையில், இங்குள்ள மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொண்டு, தயார்நிலையில் வைக்குமாறு, மின்வாரிய தலைமை உத்தரவிட்டுள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'நீலகிரி மின் திட்டம் தான் கோடையில் வெளி மாவட்ட மின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. கடந்தாண்டு பருவமழை பொய்த்ததால் மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோடையை சமாளிக்க குந்தா, பைக்காரா மின் வட்டத்தில் உள்ள, 12 மின்நிலையத்தில், 32 பிரிவுகளில் உள்ள மின்சாதன கருவிகள், ராட்சத குழாய் பராமரிப்பு பணி மற்றும் அடர்ந்த வனப்பகுதிக்கு இடையே உள்ள அபாயகரமான மின் நிலையங்களில் சாலை பணி, தண்ணீர் செல்லும் வடிகால் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் விரைவில் முடியும். கோடை மழை வந்தால் மின் உற்பத்தியில் சிக்கல் இருக்காது,' என்றனர்.

