/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஹோட்டல் கண்ணாடியை சேதப்படுத்தி ஊழியர்களை மிரட்டியவர் கைது
/
ஹோட்டல் கண்ணாடியை சேதப்படுத்தி ஊழியர்களை மிரட்டியவர் கைது
ஹோட்டல் கண்ணாடியை சேதப்படுத்தி ஊழியர்களை மிரட்டியவர் கைது
ஹோட்டல் கண்ணாடியை சேதப்படுத்தி ஊழியர்களை மிரட்டியவர் கைது
ADDED : அக் 01, 2025 11:47 PM
கூடலுார்; கூடலுார் அருகே, சிக்கன் பிரியாணியை மாற்றி கொடுத்தது தொடர்பான பிரச்னையில், வீச்சரிவாளுடன் வந்து, ஹோட்டல் கண்ணாடியை சேதப்படுத்தி ஊழியர்களை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
கூடலுார் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை மார்த்தோமா நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி,34. இவர் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில், கடந்த, 28ம் தேதி, இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கி சென்றார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது, கடை ஊழியர்கள், பிரியாணியை மாற்றி வழங்கியது தெரியவந்தது. ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி, கையில் அரிவாளுயுடன் வந்து, ஹோட்டலுக்கு சென்று, கண்ணாடியை சேதப்படுத்தி, கடை ஊழியர்களையும் மிரட்டி சென்றார்.
இது, தொடர்பாக கூடலுார் எஸ்.ஐ., கவியரசு, இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சுந்தரமூர்த்தியை கைது செய்தனர்.