/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் நாட்டு வெடி வைத்திருந்தவர் கைது
/
குன்னுாரில் நாட்டு வெடி வைத்திருந்தவர் கைது
ADDED : செப் 15, 2025 08:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார் உலிக்கல் பவானி எஸ்டேட் பகுதியில், கொலக்கம்பை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒட்டக்குடார் பள்ளம் அருகே போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 'அவுட்காய்' எனும் நாட்டு வெடி குண்டு இருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து, நடத்திய விசாரணையில், அவர் பவானி எஸ்டேட் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி,52. அவர் தோட்ட பகுதிகளில் காட்டு பன்றிகளை கொன்று இறைச்சியை குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் விற்பனை செய்தார் என்பது தெரியவந்தது.
இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில், போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.