/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காளி சிலை முன் பூஜை செய்வதாக கூறி கத்தியால் குத்தியவர் கைது
/
காளி சிலை முன் பூஜை செய்வதாக கூறி கத்தியால் குத்தியவர் கைது
காளி சிலை முன் பூஜை செய்வதாக கூறி கத்தியால் குத்தியவர் கைது
காளி சிலை முன் பூஜை செய்வதாக கூறி கத்தியால் குத்தியவர் கைது
ADDED : ஜூன் 27, 2025 09:18 PM

குன்னுார்; குன்னுார்- துாதுார்மட்டம் பஜார் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்,55. இவர் கடந்த, ஐந்து ஆண்டுகளாக வீட்டில் காளி சிலை வைத்து பூஜைகள் செய்து மக்களுக்கு குறி சொல்லி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் மகாலிங்கா காலனியை சேர்ந்த நாகராஜ், 40 என்பவரிடம், மது வாங்கி வர கூறியுள்ளார்.
மது வாங்கி கொடுத்த பிறகு, போதையில் இருந்த சிவகுமார், பூஜை அறைக்கு நாகராஜை அழைத்து சென்று, அமர வைத்துள்ளார்.
'ஊருக்குள் உன்னை பைத்தியகாரன் என கூறுகின்றனர்; அதை சரி செய்கிறேன்,' என, கூறி நாகராஜ் முகத்தில் திருநீறு பூசி, நெற்றி மற்றும் தலையில் கத்தியால் குத்தியுள்ளார். காயமடைந்து, ரத்தம் சொட்ட வெளியே ஓடிவந்த நாகராஜ் அங்கிருந்தவர்களிடம், சம்பவம் பற்றி கூறினார்.
தொடர்ந்து, 108 ஆம்புலன்சில், குன்னுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
புகாரின் பேரில், கொலக்கம்பை போலீசார், சிவகுமாரை கைது செய்து குன்னுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கிளை சிறையில் அடைத்தனர்.

