தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ யானையிடம் தப்பி ஓடி காயம் அடைந்தவர் மரணம்

யானையிடம் தப்பி ஓடி காயம் அடைந்தவர் மரணம்

யானையிடம் தப்பி ஓடி காயம் அடைந்தவர் மரணம்


ADDED : ஆக 14, 2026 06:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2026 06:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலுார்: பந்தலுார் அருகே அம்மன்காவு பொட்டச்சிறா பகுதியை சேர்ந்தவர் தியாகராஜ்,53. இவர் கடந்த மாதம், 26ம் தேதி கொளப்பள்ளி சென்று விட்டு, இரவு வீட்டிற்கு திரும்பி வந்தபோது எதிரே யானை கூட்டம் வந்துள்ளது. யானைகளிடமிருந்து ஓடி உயிர் தப்பிய இவர் காயம் அடைந்தார். தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்தார். உடலில் வலி ஏற்பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வனத்துறையினர் கூறுகையில், ‘சிகிச்சை அளித்த டாக்டரின் ரிப்போர்ட் வந்த பின்னர் இவர் இறந்ததற்கான காரணம் தெரிய வரும். அதன் பின்னர் வனத்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us