ADDED : செப் 29, 2026 01:31 PM
பந்தலுார்: பந்தலுார் அருகே, தேவாலா வாழவயல் பகுதியை சேர்ந்தவர் மேரி. இவரது மருமகன் அசோக்,35, என்பவர் கடந்த பிப்., மாதம், மேரியை அடித்து கொலை செய்தார். கைது செய்யப்பட்ட அசோக் சிறையில் இருந்த நிலையில், கடந்த மாதம் ஜாமினில் வந்துள்ளார். நாடுகாணி பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி வேலை செய்து வந்த இவர், நேற்று முன்தினம் வாழவயல் பகுதியில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது அசோக் மற்றும் மேரியின் மகன்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, சுத்தியலை கொண்டு தாக்கியதில், அசோக் காயமடைந்தார். அவர் தாக்கியதில், சுதாகர், 28, மற்றும் சுஜித்,25, ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது.
பந்தலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தேவாலா போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து சுதாகர் மற்றும் சுஜித்தை கைது செய்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அசோக், ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன், சிகிச்சை பெற்று வருகிறார்.
